ஆதார் கார்டில் நடக்கும் பண மோசடி.. தடுப்பது எப்படி?



ஆதார் கார்டு மூலம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் புதிய வகை மோசடி சமீப நாட்களில் அதிகமாக நடந்து வருகிறது. இந்த மோசடியில் முக்கியமான விஷயம் என்னவென்றால், OTP அல்லது ஒப்புதல் கோரிக்கையைப் பெறாமலேயே மக்கள் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை இழக்கிறார்கள்.


ஆதார் கார்டு மூலம் நடக்கும் இந்தப் புதிய வகை மோசடியில், மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணத்தை எடுத்துவிடுவார்கள். இதற்காக, உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP அல்லது ஒப்புதல் கோரிக்கை வராது. மோசடி செய்பவர்கள் உங்கள் பயோமெட்ரிக்ஸ் தரவுகளைப் பயன்படுத்தி உங்கள் அனுமதி இல்லாமலேயே உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்து விடுவார்கள்.


இந்த மோசடியில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க, நீங்கள் ஆதார் அமைப்பின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட வேண்டும். அதில் உள்நுழைவதன் மூலம் உங்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்ய முடியும். ஆதார் பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்பட்டவுடன், உங்கள் பயோமெட்ரிக்கைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருட முடியாது.


  • முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • அதில் உள்நுழைய ஆதார் இணைப்பு மொபைல் நம்பரை உள்ளிடவும்.
  • ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட நம்பர்க்கு OTP வரும். அதை பதிவிடவும்.
  • உள்ளே சென்றதும் உங்களுக்கு பல விருப்பங்கள் காட்டப்படும்.
  • இந்த விருப்பங்களில் ஒன்றுதான் 'Lock/Unlock Biometric’ ஆப்சன்.
  • இதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் பயோமெட்ரிக் தரவுகளைப் பூட்டலாம்.


ஆதார் பயோமெட்ரிக்ஸ் தரவுகளைத் திருடுவதன் மூலம் பல வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது போன்ற வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது தொடர்பாக சைபர் குற்றத்தின் கீழ் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடிக்கு நீங்கள் பலியாகாமல் இருக்க வேண்டுமென்றால், ஆதார் பயோமெட்ரிக்கை உடனடியாகப் லாக் செய்வது நல்லது.

ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்காவிட்டால் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நொடிப் பொழுதில் மோசடியாளர்களிடம் இழக்க நேரடலாம்

Source : tamil.samayam




0 Comments